search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீடு தேடி வரும் நடமாடும் நாய்கள் அழகு நிலையம்
    X

    வீடு தேடி வரும் நடமாடும் "நாய்கள்" அழகு நிலையம்

    • எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் எனவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
    • சேவைகளுக்கு ஏற்றவாறு கட்டணம் வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.

    வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் விலை உயர்ந்த நாய்களை கொஞ்சி, முத்தமிடத்தான் நேரம் உண்டு. குளிப்பாட்டி, காய வைத்து முடி திருத்தம் செய்வதற்கெல்லாம் நேரம் இல்லை. பொறுமையும் இல்லை.

    புனே, புது டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் மாநகரங்களில் செல்ல பிராணிகளுக்காக அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தப் புது தொழில் மூலம் வருமானத்தை லட்சத்தில் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.. சராசரியாக ஒரு நாய்க்கு, ரூ.1,000 முதல் ரூ.4,000 வரை அசால்ட்டாகக் கிடைத்துவிடுகிறது. இதில் நவீன ஆப் போன்ற அதிநவீன சமாசாரங்களை எல்லாம் கொண்டு நாய்களை விதவிதமாக அலங்காரம் செய்து அதகளப்படுத்துகிறார்கள்.

    செல்லமாக வளர்க்கப்படும் நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதற்காக சில வேலை ஆட்களை வைத்து கொண்டு உள்ளனர். ஆனால் அவர்களால் நாய்களை சரியாக பராமரிக்க முடிவது இல்லை.

    இதனை அறிந்த வாலிபர் ஒருவர் வாகனம் ஒன்றை வாங்கி அதில் நாய்களுக்கு தேவையான வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளை பொறுத்தி வைத்துள்ளார்.

    எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் எனவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் அடுத்த 10 நிமிடங்களில் போன் செய்தவர்களின் வீடுகளுக்கு முன்னால் நடமாடும் அழகு நிலைய வாகனம் வந்து நிற்கிறது.

    அவர்களிடம் தங்களது செல்லப் பிராணிக்கு என்னென்ன சேவைகள் செய்ய வேண்டும் என தெரிவித்தால் உடனடியாக நாய்களுக்கு மசாஜ் செய்தல், குளிப்பாட்டுவது, நகம் வெட்டுதல், முடியை திருத்தம் செய்தல், நாய்க்கு பல் துலக்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்கின்றனர்.

    சேவைகளுக்கு ஏற்றவாறு கட்டணம் வாங்கிக்கொண்டு செல்கின்றனர். நாய் வளர்ப்பவர்களும் அதனை தூக்கிக்கொண்டு பியூட்டி பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    இதனால் நடமாடும் நாய் அழகு நிலையங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த அழகு நிலையம் நாய்களுக்கும் தொடங்கப்பட்டு உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×