search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் மகனுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் தாய்
    X

    தெலுங்கானாவில் மகனுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் தாய்

    • மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    • தாயும் மகனும் 15 கிலோமீட்டர் தொலைவில் பெட் படல்லா சென்று படித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம்,பெத்தப் பள்ளி மாவட்டம், கமன்பூர் அடுத்த குண்டாரமை சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சொர்ணலதா (வயது 38). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரோஷன். இவர் ஐடிஐ முடித்துவிட்டு புரோகிராம் அசிஸ்டன்ட் படித்து வருகிறார்.

    சொர்ணலதா இன்டர் மீடியேட்டர் படிக்கும்போது லட்சுமணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொலைதூர கல்வி மூலம் சொர்ணலதா பட்டப்படிப்பு முடித்தார்.

    இருப்பினும் கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்பு படிக்க விரும்பிய சொர்ணலதா தனது மகன் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். தாயும் மகனும் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட் படல்லா சென்று படித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சொர்ணலதா கூறுகையில் மகனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த படிப்பில் சேர்ந்ததாக தெரிவித்தார். தாயும், மகனும் ஒரே கல்லூரி வகுப்பில் படித்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×