search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முண்டகை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மோகன்லால்
    X

    முண்டகை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மோகன்லால்

    • நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    • ராணுவ வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதால் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 5-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சூழலில் நடிகர் மோகன்லால் இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து சாலை வழியாக மேப்பாடி சென்றார். அவர் ராணுவ சீருடையில் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார். மோகன்லால் டெரிடோரியல் ஆர்மியில் லெப்டினன்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராணுவ சீருடையில் சென்ற மோகன்லால், டெரிடோரியல் ஆர்மியின் அடிப்படை முகாமை சென்றடைந்ததும் அங்குள்ள வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்றார்.

    life rescue radar என்னும் கருவியுடன் மண்ணில் புதைந்தோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×