என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மகாராஷ்டிராவில் சரத்பவார் கூட்டணியில் தொகுதி உடன்பாடு
- மகா விகாஸ் அகாதி எதிர்கட்சி கூட்டணி பா.ஜ.க.வை சந்திக்கிறது.
- கடந்த 1 வாரமாக மோதல் போக்கு நிலவியது.
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை கொண்ட மகா விகாஸ் அகாதி எதிர்கட்சி கூட்டணி பா.ஜ.க.வை சந்திக்கிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக எதிர்கட்சிகள் இடையே கடந்த ஓரு வாரமாக மோதல் போக்கு நிலவியது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 105 இடங்களிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 95 தொகுதி யிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 84 இடங்களிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 4 தொகுதிகள் சமாஜ்வாடி மற்றும் பி.டபிள்யூ.பி. கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
தலைநகரான மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.