search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டாக்டர்களின் மனிதாபிமானமற்ற செயலால் ஆஸ்பத்திரி படிக்கட்டில் குழந்தை பெற்ற பெண்
    X

    டாக்டர்களின் மனிதாபிமானமற்ற செயலால் ஆஸ்பத்திரி படிக்கட்டில் குழந்தை பெற்ற பெண்

    • பெண்ணின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.
    • டாக்டர்கள் மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம் செஞ்சு குடேவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த 21-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக கொத்த பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

    நகரத்தில் உள்ள ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறினர்.

    ஆனால் பெண்ணின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.

    இருப்பினும் அங்கிருந்த டாக்டர்கள் ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். இதனால் கர்ப்பிணிப் பெண் பல மணி நேரம் ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்திருந்தார்.

    இதனால் விரத்தி அடைந்த கர்ப்பிணிப் பெண்ணை வேறு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக அவரது உறவினர்கள் மாடி படிகட்டு வழியாக கீழே அழைத்து வந்தனர். படிக்கட்டில் நடந்து வந்த போது கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. இதனை அவரது உறவினர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். பின்னர் தாயும் குழந்தையும் அவரது உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    பிரசவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என கருதிய மருத்துவமனை ஊழியர்கள் 3 நாட்களுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றனர்.

    அவரை சமாதானம் செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து பின்னர் மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள் மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    Next Story
    ×