search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய தலை மசாஜ்
    X

    ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய தலை மசாஜ்

    • வெளிநாட்டவர், ஒரு டாலர் தலை மசாஜ் என்று இந்திய தாத்தாவின் வீடியோவை வெளியிட்டார்.
    • தாத்தா எங்கிருக்கிறார் என்பது பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

    'ஒரு டாலருக்கு தலை மசாஜ்' என்ற பெயரில், இந்திய தாத்தா ஒருவரின் தலை மசாஜ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நல்ல தலை மசாஜ், தலை வலியை போக்கி, மனநிலையில் புத்துணர்ச்சியான மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பல முடி திருத்தகங்களில் முடி வெட்டிய பின்பு சில வினாடிகள் தலை மசாஜ் செய்து விடுவார்கள். பிரபலமான கடைகளில் தலை மசாஜிற்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    வெளிநாடுகளில் தலை மசாஜ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார்கள். இந்தியாவில் வயதான சவர தொழிலாளி ஒருவர் வாடிக்கையாளருக்கு ஸ்டைலாக தலை மசாஜ் செய்யும் வீடியோ, வெளிநாட்டவர் ஒருவரை கவர்ந்துள்ளது. அதற்கு அவர் ரூ.80 கட்டணம் வசூலிப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்திருக்கிறார். காரணம் அவரது நாட்டில் தலை மசாஜிற்கு 30 டாலர் முதல் 60 டாலர் என்று வசூலிப்பார்கள். இது இந்திய மதிப்பில் 2,500 முதல் 5 ஆயிரம் ரூபாய்க்கு சமம்.

    எனவே அந்த வெளிநாட்டவர், ஒரு டாலர் தலை மசாஜ் என்று இந்திய தாத்தாவின் வீடியோவை வெளியிட்டார். தாத்தா தனது அனுபவ முதிர்வால் படு சுறுசுறுப்பாக தலையை தட்டி மசாஜ் செய்வதும், வாடிக்கையாளர் கண்ணை மூடி ரசிப்பதையும் உலகம் முழுவதும் உள்ள வலைத்தள பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

    இறுதியாக அந்த தாத்தா காது, நெற்றி, புருவம் மற்றும் கண்இமை பகுதியிலும் மசாஜ் செய்து புத்துணர்ச்சி அளிக்கிறார். வீடியோவை பாராட்டிய பார்வையாளர்கள், தலைமசாஜ் தனி ஸ்டைலாகவும், தபேலா வாசிப்பது போல இருப்பதாகவும் சிலர் கருத்து பதிவிட்டனர். சுமார் 20 லட்சம் பேர் இதை பார்வையிட்டு உள்ளனர். தாத்தா எங்கிருக்கிறார் என்பது பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.

    Next Story
    ×