search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்: ராகுல்காந்திக்கு என தனிச்சட்டம் இல்லை- பசவராஜ் பொம்மை
    X

    அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்: ராகுல்காந்திக்கு என தனிச்சட்டம் இல்லை- பசவராஜ் பொம்மை

    • நமது நாட்டுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது.
    • ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவசியமற்றது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு சமூகத்திற்கு எதிராக பேசி இருந்தார். இது சமூக மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்திருந்தது. அதனால் ராகுல்காந்தியின் பேச்சுக்கு எதிராக அந்த சமூக மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நமக்கு ஒரு சட்டம், ராகுல்காந்திக்கு என்று தனிச்சட்டம் எதுவும் இல்லை. அனைத்து தரப்பினருக்கும் சட்டம் ஒன்று தான். கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த காரணத்தால், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தை எதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பெரிது படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

    நமது நாட்டுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி அனைவரும் நடந்து கொள்வது கடமையாகும். நாம் என்ன பேசினாலும், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனோபாவம் இருக்கிறது. இது பலர் மத்தியில் உள்ளது. அதனால் என்னவோ, ராகுல்காந்தி இப்படி பேசி இருக்கலாம். ராகுல்காந்தி தனது பேச்சை சரி செய்து கொள்ள காலஅவகாசம் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    அதனை விட்டுவிட்டு சாலையில் இறங்கி போராடுவது தேவையற்றது. தேவையில்லாமல் பேசுவதும் சரியானது இல்லை. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவசியமற்றது. சட்ட விதிமுறைகளின் படியே ராகுல்காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    Next Story
    ×