என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சரிந்த வாக்குகள்.. கூட்டணி ஆதரவை எதிர்நோக்கும் பா.ஜ.க. - மோடி பிம்பத்துக்கு என்ன ஆச்சு?
- இந்தியா கூட்டணி 234-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி.
- கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணிக்கு 330 இடங்கள்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பா.ஜ.க. கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்த்துப்போய் உள்ளன.
கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அனைத்து நிறுவனங்களும் பா.ஜ.க. கூட்டணிக்கு 330 முதல் 392 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று பலவித எண்ணிக்கையில் தங்கள் கணிப்பை வெளியிட்டன.
இந்தியா கூட்டணிக்கு 107 தொகுதிகள் முதல் 182 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்று கணிப்பை வெளியிட்டு இருந்தன. ஆனால் ஓட்டு எண்ணிக்கையின்போது, கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்த்துப் போய்விட்டன. பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பா.ஜ.க. 36.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் களம் கண்ட பா.ஜ.க. 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தத்தில் 336 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி, இந்தியாவின் 14 ஆவது பிரதமர் ஆனார். இந்த தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 31 சதவீத வாக்குகளை பெற்றது.
இதைத் தொடர்ந்து 2019 தேர்தலிலும் மோடி தலைமையிலேய பா.ஜ.க. களம் கண்டது. 2014 தேர்தலை போன்றே 2019 தேர்தலிலும் நாடு முழுக்க மோடி பிம்பம் காணப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 37.36 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியது. இதில் 303 இடங்களில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்றது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது.
இரண்டு தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது. இதில் கடந்த இரு தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வாக்குகள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
2024 தேர்தலில் பா.ஜ.க. வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. மட்டும் 36.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பம் சரிந்தது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்