search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன விமானியின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு மீட்பு
    X

    ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன விமானியின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு மீட்பு

    • ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர்.
    • காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்தது.

    அமகதாபாத்:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த மாதம் குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மாயமானார். ஹெலிகாப்டர் விபத்தில் காணாமல் போன கடலோர காவல்படை விமானியின் உடல் ஒரு மாதத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் 2-ந்தேதி ALH MK-III ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அப்பால் அரபிக்கடலில் விழுந்ததில் மூன்று பேர் காணாமல் போயினர். இதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன பைலட் ராகேஷ் குமார் ராணாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    ராணாவின் உடல் போர்பந்தருக்கு தென்மேற்கே 55 கிமீ தொலைவில் கடலில் இருந்து நேற்று மீட்கப்பட்டது என்று கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×