search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பி.ஆர்.எஸ். சமூக ஊடக செயற்பாட்டாளரை கைது செய்த போலீசார்: சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிமன்றம்
    X

    பி.ஆர்.எஸ். சமூக ஊடக செயற்பாட்டாளரை கைது செய்த போலீசார்: சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிமன்றம்

    • ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக போலீசார் கைது செய்தனர்.
    • சிறையில் அடைக்கக்கோரி போலீசார் மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் நிராகரிப்பு.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ரேவந்த் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளர் கோனதம் திலீப். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் இவர் தெலுங்கானா டிஜிட்டல் டைரக்டராக இருந்தவர்.

    இவர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும், அவரது ஆட்சிக்கும் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டதாக போலீசார் கைது செய்தனர். கைது செய்த போலீசார் அவரை நீதித்துறை காவலில் (சிறையில் அடைக்க) உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தனர்.

    ஆனால் நீதிமன்றம் போலீசாரின் மனுவை நிராகரித்து, சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்துவிட்டது. இதனால் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.

    திலீப் கைது செய்யப்பட்டதற்கான முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்த வழக்கறிஞர், கீழ் நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

    முன்னதாக போலீசார் காவிலில் எடுத்தபோது, நான் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என திலீப் கூறியிருந்தார். நான் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதால் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதலும் கடைசியும் அல்ல. எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராடுவேன் என திலீப் தெரிவித்துள்ளார்.

    போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பி.ஆர்.எஸ். கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    Next Story
    ×