search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
    X

    இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

    • இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
    • இந்திய தொழில் கூட்டமைப்பின் மையங்களிலிருந்தும் காணொலி வாயிலாக பலர் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கியப் பயணம் என்ற கருப்பொருளில் மாநாடு நடந்தது.

    மாநாட்டில் தொழில்துறை, அரசு, தூதரக அதிகாரிகள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மேலும் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் இந்திய தொழில் கூட்டமைப்பின் மையங்களிலிருந்தும் காணொலி வாயிலாக பலர் பங்கேற்றனர்.

    கொரோனா தொற்று காலத்தின் போது நாம் விவாதங்களை நடத்தினோம், அந்த விவாதங்களின் மையப் புள்ளியாக வளர்ச்சியை மீண்டும் பெறுவது இருந்தது. இந்தியா விரைவில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று அப்போது கூறினேன். இன்று இந்தியா 8 சதவீத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இன்று நாம் 'வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணம்' பற்றி விவாதிக்கிறோம். இந்த மாற்றம் வெறும் உணர்வுகள் அல்ல. நம்பிக்கை. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. எனது 3-வது ஆட்சி காலத்தில் விரைவில் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும்.

    10 ஆண்டுகளில் பட்ஜெட் அளவு 3 மடங்கு அதிகரித்து ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மூலதனச் செலவு என்பது வள முதலீட்டின் மிகப்பெரிய உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட்டில், மூலதனச் செலவு சுமார் 90,000 கோடி ரூபாயாக இருந்தது. அது ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்தது. இன்று மூலதனச் செலவு ரூ. 11 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு முன் ரூ.5 லட்சம் கோடி ஊழல்கள் நடந்ததை அனைவரும் அறிவீர்கள். பொருளாதாரம் குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தேசத்தின் முன்வைத்தோம். பின்னர் இந்தியாவின் தொழில்களை உயரத்திற்கு கொண்டு வந்தோம்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இந்த பட்ஜெட், வளர்ந்த பாரதத்துக்கு வழி வகுக்கும். எங்கள் திசையில் வேறுபாடு இல்லை. அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி உள்ளோம். தேசத்துக்கு முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×