search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்.. காங்கிரஸ் போர் கொடி
    X

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்.. காங்கிரஸ் போர் கொடி

    • மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனுவில் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. மத்திய அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர், நிதியமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஜெய்ராம் ரமேஷ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    "அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் "குற்றவாளி" என்பதால் நிதியமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று," என்று அவர் கூறினார்.

    Next Story
    ×