search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல்காந்தியின் முதல் யாத்திரைக்கு ரூ.72 கோடி செலவு செய்த காங்கிரஸ்
    X

    ராகுல்காந்தியின் முதல் யாத்திரைக்கு ரூ.72 கோடி செலவு செய்த காங்கிரஸ்

    • 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
    • 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் பாரத ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.

    அங்கிருந்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த அவர் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தனது முதல் கட்ட யாத்திரையை காஷ்மீரில் நிறைவு செய்தார்.

    இந்த யாத்திரையின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய பிரபலங்களும் பயணித்தனர். யாத்திரையின் போது வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர் பேசியது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் முதல்கட்ட யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி ரூ.71.8 கோடி செலவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது காங்கிரசின் மொத்த ஆண்டு செலவின் 15.3 சதவீதமாகும். 2022-2023-ம் ஆண்டுக்கான நிர்வாக மற்றும் பொது செலவுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

    அதில், 2021-2022-ம் ஆண்டில் காங்கிரசில் மொத்த வரவுகள் ரூ.541 கோடியாக இருந்தது. இந்நிலையில் இது கடந்த 2022-2023-ம் ஆண்டில் ரூ.452 கோடியாக குறைந்து உள்ளது. அதே நேரத்தில் அதன் செலவினம் ரூ.400 கோடியில் இருந்து 467 கோடியாக உயர்ந்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×