search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொலைந்து போன பிரஜ்வல் செல்போனை கண்டறிய முயற்சி மேற்கொள்ளும் போலீசார்
    X

    தொலைந்து போன பிரஜ்வல் செல்போனை கண்டறிய முயற்சி மேற்கொள்ளும் போலீசார்

    • தொலைந்து செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றன.
    • IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். ஹசன் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ அடங்கிய பென் டிரைவ் வெளியானது. பல பெண்களுடன் பிரஜ்வல் இருப்பது போன்ற ஏராளமான வீடியோ கிளிப் அதில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெண்களை வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 3 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிறப்பு விசாணைக்குழு அமைத்தது. இதற்கிடையே பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

    கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் நேற்று அதிகாலை பெங்களூரு திரும்பிய அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் அவரை வருகிற 6-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பிரஜ்வலை ஆண்மை பரிசோதனைக்கு உட்பட்டதாக தகவல் வெளியானது.

    பெண்கள் உடன் இருக்கும் வீடியோவை அவரது செல்போன் மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என சிஐடி நம்புகிறது. இதனால் அவரது செல்போனை கண்டுபிடித்தால் மேலும் பல தகவல்களை பெற முடியும் என நினைக்கிறது.

    ஆனால் பிரஜ்வல் செல்போன் கடந்த வருடமே தொலைந்து விட்டதாம். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்ததுள்ளார்.

    இதனால் புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தில் செல்போன் குறித்த தகவலை எஸ்ஐடி கேட்டுள்ளது. அவர்கள் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் IMEI நம்பர் மூலம் செல்போனை கண்டுபிடிக்க முயற்சி செய்ய தீர்மானித்துள்ளது.

    ஒருவேளை போன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், போனை பிரஜ்வால் அழித்து இருக்கலாம் என்று நம்பும் நிலை ஏற்படும். அப்படி இருந்தால், ஆதாரங்களை சேதப்படுத்துதல் என்ற கூடுதல் குற்றச்சாட்டை பிரஜ்வல் மீது பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×