என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மேலும் 3 துணை முதல்வர் கோரிக்கை: சித்தராமையாவின் பதில் என்ன?
- கட்சியின் உயர்மட்டக்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் இறுதி முடிவு- சித்தராமையா.
- யார் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவர்களுக்கு கட்சி தகுந்த பதில் அளிக்கும்- டிகே சிவக்குமார்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் இருந்து வருகிறார்கள்.
மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் வீரசைவ-லிங்காயத், எஸ்சி-எஸ்டி மற்றும் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தெடர்பாக சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கட்சியின் உயர்மட்டக்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் இறுதி முடிவு" என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.
தற்போது துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை கேட்க வாய்ப்புள்ளதாக சித்தராமையா அணி நினைக்கிறது. இதனால் அவருக்கு ஒரு செக் வைப்பதற்காக இப்படி ஒரு பரிந்துரை வெளிவந்துள்ளதாகவும், அரசு மற்றும் கடசியில் அவரின் ஆதிக்கத்திற்கு பதிலடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.
சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமான மந்திரிகள் கே.என். ராஜண்ணா, ஜமீர் அகமது கான், சதீஷ் ஜர்கிகோலி மற்றும் சிலர் இந்த வார தொடக்கத்தில் மேலும் மூன்று துணை முதல்வர் கோரிக்கை வழியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது சித்தராமையா முதல்வராக இருப்பார். டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார் என காங்கிரஸ் முடிவு செய்தது.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "நீங்கள் (ஊடகங்கள்) யாராவது ஏதாவது சொன்னால் செய்தியாக போடுங்கள். (செய்திகளில் தோன்றி) மகிழ்ச்சியாக இருப்பவர்களை நான் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். யார் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவர்களுக்கு கட்சி தகுந்த பதில் அளிக்கும்" என்றார்.