search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் 150 பெட்டிகளில்  வந்திறங்கிய நாய் இறைச்சி?.. சர்ச்சை
    X

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் வந்திறங்கிய நாய் இறைச்சி?.. சர்ச்சை

    • ரெயில் நிலையத்தில் இருந்த மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • அவை நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    பெங்களூரு கேஎஸ்ஆர் ரெயில் நிலயத்தில் நேற்று இரவு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 150 பெட்டிகளில் 3 டன் [3000 கிலோ] பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் இருந்த அந்த இறைச்சிகளை பார்க்க ரெயில் நிலையத்திலிருந்த மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவை நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.மேலும் அவை பெங்களூரில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அப்துல் ரசாக் என்ற டீலர் அதை அவர் விற்பதற்காக ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தான் வரவழைத்தது ஆட்டிறைச்சி தான் என்றும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். தன்னை பொய் வழக்கில் மாட்டி விட கேரஹல்லி சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அது உண்மையில் என்ன இறைச்சி என்று அறிய போலீசார் அதை பரிசோதனைக்கு அனுப்பியுன்னர்.

    Next Story
    ×