search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அனைத்து கட்சி கூட்டம்
    X

    வங்காளதேச நிலைமை குறித்து அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

    • பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
    • பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

    அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து வங்காளேதச நிலவரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மத்திய மந்திரிகளுடன் ஆலோசித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசம் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதன் படி காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

    மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியா-வங்காள தேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்காளதேச அரசியல் சூழல், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கூட்டத்தில் விரிவான விளக்கத்தை அளித்தார்.

    பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவினையும், புரிதலையும் பாராட்டுவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.


    Next Story
    ×