என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மேற்கு வங்காளம்- ஜார்க்கண்டில் அமலாக்கத்துறை சோதனை: 17 இடங்களில் அதிரடி வேட்டை
- பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஊடுருவி தங்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்து பெயர்களுடன் கூடிய ஆதார் அட்டையுடன் சில பெண்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவியதாக ராஞ்சியில் உள்ள பரியாது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி உள்ளிட்ட 17 இடங்களில் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் இன்று அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.