என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடக இறையாண்மை கருத்து.. சோனியா காந்தியிடம் விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.
- மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம் என பாஜக கூறி உள்ளது.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 'சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கர்நாடகாவின் இறையாண்மை என்ற வார்த்தைதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.
'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.
இந்த புகார் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக விளக்கம் அளித்து, திருத்த நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறி உள்ளது.