search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    130 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் வழக்குப்பதிவு: கர்நாடகா அதிரடி முடிவு
    X

    130 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் வழக்குப்பதிவு: கர்நாடகா அதிரடி முடிவு

    • 2022-ம் ஆண்டில், கர்நாடகாவில் 90 சதவீத (விபத்து) இறப்புகளுக்கு அதிவேகமே காரணம் என்று கூறப்பட்டது.
    • ஜூலை 25 அன்று பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் 155 பேர், மணிக்கு 130 கிமீ வேகத்தில் சென்றுள்ளனர்.

    கர்நாடகாவில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் இந்த விதிமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அவரது அறிக்கைப்படி, மாநிலத்தில் அதிவேகமாக செல்வதால் ஏற்படும் விபத்தால் 90 சதவீத மரணம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூலை 25 அன்று பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் 155 பேர், மணிக்கு 130 கிமீ வேகத்தில் சென்றதாகக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு) அலோக் குமார் தகவல்களை மேற்கோள் காட்டி கூறினார்.

    பாரதீய நியாய சன்ஹிதா - 281-ன் கீழ், அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினாலும், வேக வரம்பு 120 கி.மீ- ஐ தாண்டினாலும் அது வேகமாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டுவதாக குமார் விளக்கினார்.

    இந்த மாத தொடக்கத்தில் NICE (Nandi Infrastructure Corridor Enterprise) சாலையில் நடந்த விபத்தை நினைவு கூர்ந்த அவர், விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், அந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் மணிக்கு 160 கிமீ வேகத்தில் சென்றதாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், சாலை பாதுகாப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு இந்த விபத்தை கவனத்தில் கொண்டு, வேகம் அதிகமாக இருப்பதாகவும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மாநில அரசுக்கு தெரிவித்தது.

    2022-ம் ஆண்டில், கர்நாடகாவில் 90 சதவீத (விபத்து) இறப்புகளுக்கு அதிவேகமே காரணம் என்று கூறப்பட்டது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பு குழு இது தொடர்பாக திறம்பட அமலாக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில்தான் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. (மணிக்கு 130 கிமீ வேகத்தில் செல்பவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு) இது ஒரு உண்மையான சவாலாக இருக்கும். ஆனால் நாங்கள் அதைச் செய்ய முயற்சிப்போம்.

    புதிய விதி அனைத்து சாலைகளுக்கும் பொருந்தும் என்றும், நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் அல்ல என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×