என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆறு, ஏரிகளில் மூழ்கி மாணவர்கள் 5 பேர் பலி
- எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் ரின்ஷாத், ரஷீத் ஆகியோர் ஆற்றில் தவறி விழுந்தனர்.
- ஏரியில் குளித்தபோது முகுந்தன் உன்னி உள்பட 3 பேரும் சேறு நிறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அகம்பாடம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி நசீமா. இவர்களது மகன்கள் ரின்ஷாத் (வயது14), ரஷித் (12) ஆகியோர் விடுமுறை தினமான நேற்று நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பெருவம்படம் பகுதியில் உள்ள குருவான் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் ரின்ஷாத், ரஷீத் ஆகியோர் ஆற்றில் தவறி விழுந்தனர். இதனை கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலம்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 சிறுவர்கள் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சகோதரர்கள் ரின்ஷாத், ரஷீத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்...
திருவனந்தபுரம் வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முகுந்தன் உன்னி (19), பெர்டின் (19), லிபினன் (19). இவர்கள் 3 பேரும் வெங்கனூர் கிறிஸ்து கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் மேலும் சிலருடன் அந்தப் பகுதியில் உள்ள வெள்ளையணி ஏரியில் குளிக்கச் சென்றனர்.
ஏரியில் குளித்தபோது முகுந்தன் உன்னி உள்பட 3 பேரும் சேறு நிறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினர். இதனை பார்த்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முகுந்தன் உன்னி, பெர்டின், லிபினன் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நண்பர்களுடன் ஏரியில் குளித்த 3 கல்லூரி மாணவர்கள் இறந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.