என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியாவில் காணப்படும் உலகின் மிகப்பெரிய அணில்
- டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒரு படத்தில் ராட்சத அணில் ஒன்று மரத்தின் மேலே அமர்ந்திருந்தது.
- உங்களால் அடையாளம் காண முடியுமா? என்று படத்திற்கு தலைப்பிட்டிருந்தார்.
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான்வன விலங்குகள் பற்றிய சுவாரசியமான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஒரு படத்தில் ராட்சத அணில் ஒன்று மரத்தின் மேலே அமர்ந்திருந்தது. அந்த படத்துடன் அவரது பதிவில், உலகின் மிகப்பெரிய அணில் இனங்களில் ஒன்று இந்தியாவில் காணப்படுகிறது.
உங்களால் அடையாளம் காண முடியுமா? என்று அந்த படத்திற்கு தலைப்பிட்டிருந்தார். பயனர்களின் கவனத்தை ஈர்த்த இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், இது மலபார் ராட்சத அணில் என்றும் சிலர், தாங்கள் பார்த்த மற்ற ராட்சத அணில்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
அதில் ஒருவர், இது மிகவும் அழகாக இருக்கிறது எனவும், மற்றொரு பயனர், ஒடிசாவில் இப்படி ஒரு அணிலை பார்த்தேன். தேக்கு மரங்களில் இவற்றை காண முடியும் என குறிப்பிட்டிருந்தார். அதே நேரம் வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், இந்த அணிலின் புகைப்படம் மேற்கு வங்காளத்தின் பக்சாவில் எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.