என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருப்பதியில் நள்ளிரவு வரை கருட தரிசனம்: கோவிந்தா கோஷத்தால் அதிருகிறது திருமலை
- ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
- திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்ப விருட்ச வாகனத்தில் பாலித்தனர். 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் 4 உலா வந்தார்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று மாலை நடக்கிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து நேற்று மாலை முதல் லட்சக் கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. கருட சேவையை காண மாட வீதிகளில் 2 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
மாலை 6.30 மணிக்கு ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். இந்த ஆண்டு கருட சேவை நள்ளிரவு வரை நடக்க வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருட சேவையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்கு செல்ல இன்று காலை முதல் இரவு வரை அனுமதி மறுக்கப்பட்டது.
திருப்பதியில் நேற்று 81,481 பேர் தரிசனம் செய்தனர். 38,762 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரமும், ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசனத்தில் வந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கோவிந்தா கோஷத்தால் திருமலை அதிர்ந்தது.