search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணத்தின் போது மணமகளின் காலில் விழுந்த மணமகன்
    X

    திருமணத்தின் போது மணமகளின் காலில் விழுந்த மணமகன்

    • யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மணமகன் கல்லோல் தாஸ் பதிலுக்கு மணமகளின் காலில் விழுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    இந்தியாவில் திருமணங்களின் போது மணமக்கள் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஒரு சில மாநிலங்களில் திருமண சடங்கின் ஒரு பகுதியாக மணமகள் மணமகனின் கால்களில் விழுந்து ஆசி பெறும் வழக்கமும் உள்ளது. அந்த வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது மணமகள், மணமகன் கல்லோல் தாசின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மணமகன் கல்லோல் தாஸ் பதிலுக்கு மணமகளின் காலில் விழுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது கூடியிருந்த திருமண வீட்டார் அனைவரும் பலத்த கரவொலி எழுப்புகின்றனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அதில், பலரும் விமர்சனம் செய்த நிலையில் மணமகன் கல்லோல்தாஸ் கூறுகையில், நான் சடங்குகளை புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. என் மனைவிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று தான் கருதினேன் என்றார். அதே நேரத்தில் அவரது செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒரு பயனர், மணமகனை யாரும் தடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவரை எப்படி உற்சாகப்படுத்தினார்கள் என்பதை கவனியுங்கள். அப்படிதான் இருக்க வேண்டும் என பாராட்டினர். இதை போல மற்றொரு பயனர் தனது பதிவில், ஒவ்வொரு திருமணமும் இப்படித்தான் இருக்க வேண்டும். கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×