search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்: நிர்மலா சீதாராமன்
    X

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்: நிர்மலா சீதாராமன்

    • வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது
    • கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    "தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர திட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், "தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்தி இருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×