search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி- காங்கிரஸ் அறிவிப்பு
    X

    ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி- காங்கிரஸ் அறிவிப்பு

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும்.
    • கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் ரோடு ஷோ நடத்தினார்.

    மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டனர். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி அளித்து உள்ளது. கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அரசில் காலியாக உள்ள 2.3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம். கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைநகரை கூட இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு 3 தலை நகரங்களை ஏற்படுத்துவேன் என கனவு கண்டு வாக்குறுதி அளிக்கிறார்.

    இவர்களால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு விரிவான வளர்ச்சியை உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×