என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பக்கா ஸ்கெட்ச் போடும் "இந்தியா" கூட்டணி - ஆட்சி அமைக்க கையில் எடுக்கும் கடைசி அஸ்திரம்
- பிரதமரை தேர்வு செய்வதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம்.
- சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.-வால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு தேவையானதை விட 240 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்றுள்ளதால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல்தான் உருவாகி இருக்கிறது.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்தியாவில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுக்க செய்ய வேண்டியவற்றை நிச்சயம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான வியூகம் அமைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.
இதனிடையே "இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுப்போம்," என்று சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இது குறித்து பேசிய அவர், "இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்தே, நாட்டில் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். பிரதமர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். பா.ஜ.க.-வால் இன்னலுக்கு ஆளானவர்கள் நிச்சயம் எங்களுக்கு துணை நிற்பார்கள். சந்திரபாபு நாயுடுவும் பா.ஜ.க. அரசாங்கத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்."
இந்த சூழலில்தான், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான முடிவு கிடைக்கவில்லை. இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனதா தளத்தை சேர்ந்தவரும், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக விளங்கியவருமான நிதிஷ் குமார் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தலில் கிங் மேக்கர்களாக இருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் யாருக்கு ஆதரவு என்பதில் தங்களின் நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இருவருக்கும் மத்திய மந்திரிசபையில் பொறுப்பு வழங்கப்படுமா அல்லது துணை பிரதமர் போன்ற பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இருவரும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கும் போது, மற்ற கட்சிகளும் ஆட்சியமைக்கும் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகலாம். மத்தியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் பதவி, துணை பிரதமர் பதவி அல்லது மந்திரி சபையில் இடமளிப்பது உள்ளிட்டவை இந்தியா கூட்டணியின் கடைசிக்கட்ட அஸ்திரமாக இருக்கும் என்று தெரிகிறது.
யாருக்கு ஆதரவளிப்பார் என்ற வகையில், சந்திரபாபு நாயுடு இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அப்படியாக நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பத்திற்கு விரைவில் முடிவு கிடைத்துவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்