search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இந்தியாவின் புதிய தயாரிப்பான 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்
    X

    இந்தியாவின் புதிய தயாரிப்பான 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்

    • கனடாவுடனான மோதல்களுக்கு மத்தியில் இந்தியா தனது அணுசக்தி தடுப்பை வலுப்படுத்தியுள்ளது.
    • இந்தியாவின் அடுத்தகட்ட எஸ்.எஸ்.பி.என்.கள் 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை அணுகுண்டு ஏவுகணைகளை சுமந்து செல்லும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 2-வது எஸ்.எஸ்.பி.என்., ஐ.என்.எஸ். அரிகாட்டை கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இயக்கி வைத்தார்.

    3-வது எஸ்.எஸ்.பி.என்., ஐ.என்.எஸ். அரிதாமான் அடுத்த ஆண்டு இயக்கப்படும்.

    இந்நிலையில் இந்தியா தனது எதிரிகளுக்கு எதிரான அணுசக்தி தடுப்பை வலுப்படுத்த இந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் (எஸ்.பி.சி.) 4-வது அணுசக்தி ஏவுகணை (எஸ்.எஸ்.பி.என்.) நீர்மூழ்கிக் கப்பலை அமைதியாக ஏவியுள்ளது. கனடாவுடனான மோதல்களுக்கு மத்தியில் இந்தியா தனது அணுசக்தி தடுப்பை வலுப்படுத்தியுள்ளது.

    அக்டோபர் 9-ந் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்திய-பசிபிக் பகுதியில் எதிரிகளை தடுக்கும் வகையில் 2 அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான இந்திய கடற்படையின் திட்டங்களை அனுமதித்தது.

    மோடி அரசு அணு ஆயுத தடுப்பு நடவடிக்கையில் வாய் திறக்கவில்லை என்றாலும் அக்டோபர் 16-ந் தேதி பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் தெலுங்கானாவில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தாமகுண்டம் வனப்பகுதியில் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட கடற்படைத் தளத்தைத் திறந்து வைத்த மறுநாளே இந்த புதிய 4-வது அணு சக்தி ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை இந்தியா ஏவியுள்ளது.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.4 (எஸ்.எஸ்.பி.என்.) அணுசக்தி ஏவுகணை ஏறக்குறைய 75 சதவீத உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மற்றும் 3,500கி.மீ. தூரம் கொண்ட கே-4 அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது. இவை செங்குத்து ஏவுதல் அமைப்புகள் மூலம் ஏவப்படும்.

    ஐ.என்.எஸ். அரிஹந்த் மற்றும் ஐ.என்.எஸ். அரிகாத் ஆகிய இரண்டும் ஏற்கனவே ஆழ்கடல் ரோந்துப் பணியில் உள்ளன. மேலும் ரஷ்ய அகுலா வகுப்பின் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் 2028-ல் குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட உள்ளது.

    இந்தியாவின் முதல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட அணு ஆயுதத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சக்ராவை தேசிய பாதுகாப்புத் திட்டமிடுபவர்கள் எஸ்.1 என்று பெயரிட்டதால், ஐ.என்.எஸ். அரிஹந்த் எஸ்.2, ஐ.என்.எஸ். அரிகாத் எஸ்.3, ஐ.என்.எஸ். அரிதாமன் எஸ்.4 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    எனவே புதிதாக ஏவப்பட்ட அணுசக்தி ஏவுகணை எஸ்.4 என்ற பெயருடன் முறையாக அறிவிக்கப்படவில்லை.

    இந்தியாவின் அடுத்தகட்ட எஸ்.எஸ்.பி.என்.கள் 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை அணுகுண்டு ஏவுகணைகளை சுமந்து செல்லும்.

    சீனா போன்ற பலம் வாய்ந்த எதிரி நாடுகளுக்கு எதிராக கடல் அடிப்படையிலான அணு ஏவுகணைகளை தடுப்பதில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது.

    எனவே அணுசக்தி தாக்குதல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

    நீர்மூழ்கி கப்பலின் 6-வது ஐ.என்.எஸ். வாக்ஷிர் இந்த ஆண்டு டிசம்பரில் இயக்கப்படவுள்ளதால் வழக்கமான நீழ்மூழ்கி கப்பல் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.

    Next Story
    ×