என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை- கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு
- கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது புகார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜே.பி.நட்டா, கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார். கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதவிக செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக தலைவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு அக்டோபர் 22 ஆம் ஆம் தேதி இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 22 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.