search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இரும்பு முள்வேலி
    X

    ஆந்திராவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இரும்பு முள்வேலி

    • 26 மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொருவரின் விவரங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டில் பதிவு செய்யப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தன.

    இந்த நிலையில் முழுவதும் உள்ள 26 மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

    மேலும் வெளி ஆட்கள் மையத்திற்குள் செல்லாதவாறு இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில ஆய்த படை போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்பகுதிக்கு வரும் ஒவ்வொருவரின் விவரங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டில் பதிவு செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வேட்பாளரின் முகவர்களும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றிலும் இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×