என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வெள்ளி கோள் ஆய்வு விண்கலம் 2028-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
- சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும்.
- சுக்ரயான்-1 என்ற விண்கலமும் தயார் செய்யும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.
சூரியக்குடும்பத்தில் சூரியனில் இருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோள் வீனஸ் என்ற வெள்ளி கோளாகும். வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாக காணப்படும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம், விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும்.
வெள்ளி பற்றி ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுக்ரயான்-1 என்ற விண்கலமும் தயார் செய்யும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும் போது, 'வளிமண்டலம் மற்றும் புவியியல் ஆய்வுக்கான இந்தியாவின் வீனஸ் திட்டம் வருகிற 2028-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. கிரகங்களுக்கு இடையேயான பணி என்பதால், இஸ்ரோவின் அதிக எடையை தாங்கி செல்லும் எல்.வி.எம்-3 ரகத்திலான பாகுபலி ராக்கெட்டை பயன்படுத்தப்பட உள்ளது. ஏவப்பட்ட 4 மாதங்களுக்குப் பிறகு, 112 நாட்கள் பயணத்திற்கு பிறகு அதே ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி சுற்றுப்பாதை வழியாக வெள்ளிக்கோளை சுக்ரயான்-1 விண்கலம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ராக்கெட் பூமியில் இருந்து குறைந்த பட்சம் 170 கிலோ மீட்டரிலும் அதிகப்பட்சம் 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிலை நிறுத்தும். ரூ.1,236 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், ரூ.824 கோடி விண்கலத்தை உருவாக்குவதற்காக செலவிடப்பட உள்ளது' என்று தெரிவித்தனர்.