என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பா.ஜனதாவில் இணைந்தார்
- ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர்.
- கடந்த ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர் கடந்த ஆண்டு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இன்று டெல்லி சென்ற ஷெட்லர், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்தித்தார். அதன்பின் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
68 வயதாகும் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவிடம் சீட் கேட்டார். பா.ஜனதா அவருக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது.
இதனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மத்திய ஹூப்ளி-தர்வாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பா.ஜனதா வேட்பாளரால் சுமார் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.