என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடக முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்யும் - காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம்!
- காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 135 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சுயேட்சையாக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் பார்வையாளர்களாக செயல்பட்டனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.