search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    11-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்: பா.ஜ.க., திரிணாமுல் கட்சிகள் நேருக்கு நேர் `தர்ணா
    X

    11-வது நாளாக டாக்டர்கள் போராட்டம்: பா.ஜ.க., திரிணாமுல் கட்சிகள் நேருக்கு நேர் `தர்ணா'

    • பெண் டாக்டர் உடலில் 14 இடங்களில் காயம்.
    • கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலை தொடர் பாக போலீசில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நேற்று உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சி.பி.ஐ. குழுவை சேர்ந்த 5 டாக்டர்கள், சஞ்சய் ராயின் மனநிலையை பரிசோதித்தனர்.

    பெண் டாக்டர் கொலைக்கு பிறகு 2 பேரி டம் சஞ்சய் ராய் அடிக்கடி போனில் பேசியுள்ளார். இது தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    ஆர்.ஜி.கார் மருத்துவமனை யின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், கொலையை மறைக்க முயற்சி செய்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களில் சிலர் மீது கொலையுண்ட பெண் டாக்டரின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சந்தேகத்துக்குரிய அவர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட டாக்டர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    கொலை நடைபெற்ற மருத்துவமனையின் கருத்த ரங்க கூடத்தில் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் எத்தனை பேர் சம்பவ இடத்தில் இருந்தனர் என்பதை கண்டறிய முடியும்.

    பெண் டாக்டர் வேறு இடத்தில் கொலை செய்யப் பட்டு, கருத்தரங்க கூடத்தில் உடல் வைக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலையுண்ட பெண் டாக்டரின் தந்தை கூறுகையில், "எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்ற வாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது.

    ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் எனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு, 4 ஆண் டாக்டர்களோடு எனது மகளுக்கு பணி வழங்கப்பட்டது.

    கருத்தரங்கு கூடத்தில் கொலை நடைபெற்றதாக போலீசார் கூறுகின்றனர். இதை நம்ப முடியவில்லை. மருத்துவமனையின் வேறு பகுதியில் எனது மகளை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் கருத்தரங்கு கூடத்தில் உடலை வைத்துள்ளனர். கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    கொல்கத்தா பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டு இன்று (திங்கட் கிழமை) 11-வது நாளாக மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அது போல நாடு முழு வதும் பல மாநிலங்களில் இன்று போராட்டம் தீவிரப் படுத்தப்பட்டது.

    இதனால் அவசர சிகிச்சை பணிகளில் மட்டுமே டாக்டர்கள் ஈடுபடு கின்றனர். இதர மருத்துவ பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

    இதன்காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்க ளில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2,500-க்கும் மேற் பட்ட அறுவைச் சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டரின் பிரேத பரிசோ தனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் பெண் டாக்டர் உடலில் 14 இடங்க ளில் கடுமையான ரத்த காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது உறுப்பில் வெள்ளை நிற அடர்த்தியான திரவம் வீசப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றத்தை மறைக்க சிலர் திட்டமிட்டு அப்படி செய்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக் கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெண் டாக்டரின் உடலில் 14 இடங்களில் கொடூர காயங்கள் இருப்ப தால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர் கடுமையாக பலரால் சித்ரவதை செய்யப் பட்டு இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையின் இந்த புதிய தகவல் கொல்கத்தா டாக்டர்கள் மத்தியில் மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று அவர்கள் இரவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய அவர்கள் போராட்டம் நடைபெற்றது.

    அதுபோல கொல்கத்தா வில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் முற்றுகை யிட்டு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. இதனால் கொல்கத்தாவில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    டாக்டர்கள் மற்றும் பொது மக்களின் போராட் டத்தை ஒடுக்க மேற்கு வங்காள அரசு சில அறி விப்புகளை வெளியிட்டு உள்ளது. இன்று முதல் கொல்கத்தாவில் பேரணி நடத்தவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று மேற்கு வங்கா ளத்தில் பாரதிய ஜனதா சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரசாரும் பதில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேற்கு வங்கா ளத்தில் பல இடங்களில் இன்று பாரதீய ஜனதாவும், திரிணாமுல் காங்கிரசும் நேருக்கு நேர் தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் இன்று அவசர கூட்டம் நடத்தினார். அதில் அவர் பெண் டாக்டர் கொலை தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் கொல் கத்தாவில் இன்று ஆயி ரக்கணக்கான பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர். எங்களுக்கு நீதி வேண்டும் என்று பெண் அமைப்புகள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.

    பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×