search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு: லைவ் அப்டேட்ஸ்

    • மகாராஷ்டிராவில் 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.
    • ஜார்க்கண்டில் ஒரு கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்கள்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.

    மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுக்கட்டுகின்றன.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந்தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் இன்று 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    ஒரு கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    Live Updates

    • 20 Nov 2024 8:27 AM IST

      மகாராஷ்டிரா: மும்பாதேவி தொகுதி சிவசேனா வேட்பாளர் ஷைனா என்.சி. தனது மகளுடன் வந்து வாக்களித்தார்.

    • 20 Nov 2024 8:25 AM IST

      மகாராஷ்டிரா: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

    • 20 Nov 2024 8:23 AM IST

      மகாராஷ்டிரா: ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகாந்த தாஸ் வாக்களித்தார்.

    • 20 Nov 2024 8:22 AM IST

      மகாராஷ்டிரா: சினிமா டைரக்டர் கபீர் கான் வாக்களித்தார்.

    • 20 Nov 2024 8:21 AM IST

      மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ். சொக்கலிங்கம் வாக்களித்தார்

    • 20 Nov 2024 8:19 AM IST

      சரத் பவார் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே வாக்களித்தார்.

    • 20 Nov 2024 7:56 AM IST

      மகாராஷ்டிரா: நடிகர் ராஜ்குமார் ராவ் வாக்களிக்க வீட்டில் இருந்து புறப்பட்ட காட்சி.

    • 20 Nov 2024 7:35 AM IST

      வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்கு செலுத்துங்கள் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 20 Nov 2024 7:30 AM IST

      ஜார்க்கண்டில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

    • 20 Nov 2024 7:28 AM IST

      மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் வாக்கு செலுத்தினார்.

    Next Story
    ×