search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 180 பவுன் நகையை பாதுகாப்பு அறைக்கு தாமதமாக கொண்டு சென்ற ஊழியர்கள்
    X

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 180 பவுன் நகையை பாதுகாப்பு அறைக்கு தாமதமாக கொண்டு சென்ற ஊழியர்கள்

    • சபரிமலை மண்டல பூஜையில் கிடைத்த தங்க நகைகள் அனைத்தும் கோவில் ஊழியர்களால் மதிப்பிடப்பட்டு உடனடியாக சபரிமலையில் இருந்து ஆரன்முளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • மகரவிளக்கு காலத்தில் கிடைத்த சுமார் 180 பவுன் நகைகள் சபரிமலையில் இருந்து ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு உடனடியாக கொண்டு செல்லப்படவில்லை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் அளித்த காணிக்கை இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதாவது ரூ.370 கோடி வரை காணிக்கை வசூலானது.

    இதில் 400 பவுன் நகையும் காணிக்கையாக கிடைத்தது. இவ்வாறு காணிக்கையாக கிடைக்கும் தங்கத்தை கோவில் ஊழியர்கள் உடனடியாக பிரித்தெடுத்து அதனை ஆரன்முளாவில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சபரிமலை மண்டல பூஜையில் கிடைத்த தங்க நகைகள் அனைத்தும் கோவில் ஊழியர்களால் மதிப்பிடப்பட்டு உடனடியாக சபரிமலையில் இருந்து ஆரன்முளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஆனால் மகரவிளக்கு காலத்தில் கிடைத்த சுமார் 180 பவுன் நகைகள் சபரிமலையில் இருந்து ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு உடனடியாக கொண்டு செல்லப்படவில்லை. இது பற்றிய தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த 180 பவுன் தங்க நகைகளை ஆரன்முளா பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டின் திருவாபரண ஆணையாளர் பைஜூ விசாரணை நடத்த உள்ளார். அப்போது நகைகளை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல தாமதப்படுத்தியவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் தெரியவரும்.

    Next Story
    ×