என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
BySuresh K Jangir2 Aug 2022 1:07 PM IST (Updated: 2 Aug 2022 4:14 PM IST)
- மலப்புரம் பகுதியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
- கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:
வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவருக்கும் இதே பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் கடந்த 27-ந் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்தார். அவருக்கு லேசான காய்ச்சலும், கொப்பளங்களும் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இவரையும் சேர்த்து கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×