search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரேட்டிங்கை குறைத்த Moodys.. பங்குச் சந்தையில் சரிந்த அதானி குழுமம்
    X

    ரேட்டிங்கை குறைத்த Moody's.. பங்குச் சந்தையில் சரிந்த அதானி குழுமம்

    • விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பின.
    • 7 நிறுவனங்களின் ரேட்டிங் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்க குற்றவியல் துறை அதானி குழுமம் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்த சம்பவம் இந்திய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், அதான குழும தலைவர் கௌதம் அதானி மீது நடவடிக்கை எடுக்கவும், விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பின.

    இந்த நிலையில், அதானி குழுமம் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலி காரணமாக அதன் 7 நிறுவனங்களின் மதிப்பீட்டை நிலையானது (Stable) என்பதில் இருந்து எதிர்மறை (Negative) என குறைத்து மூடிஸ் (Moody's) நிறுவனம் மாற்றியுள்ளது.

    அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எலெக்ட்ரிசிட்டி மும்பை, அதானி போர்ட்ஸ், உள்ளிட்ட 7 நிறுவனங்களின் ரேட்டிங் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை காரணமாக அதானி குழுமத்தின் நிதி திரட்டும் திறன் குறையும் என்றும் மூலதனச் செலவுகளை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    மூடிஸ் நிறுவனம் மதிப்பீட்டை குறைத்ததை அடுத்து இன்று (நவம்பர் 26) இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 7% வரை கடும் சரிவை சந்தித்தன.

    Next Story
    ×