search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முடா விவகாரம்: ஆளுநர் அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் சித்தராமையா
    X

    முடா விவகாரம்: ஆளுநர் அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் சித்தராமையா

    • முடா முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி.
    • ஆளுநர் அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு தாக்க செய்ய இருக்கிறார் சித்தராமையா.

    முடா முறைகேடு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளிதுள்ளார். முடா முறைகேட்டில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஆளுநர் வழக்குப்பதிவை செய்ய வழங்கிய அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்ககோரியும் கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது.

    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) சித்தராமையா மனைவிக்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது. இந்த வீட்டுமனைகள் முறையற்ற முறையில் ஒதுக்கப்பட்டதாக கூறி, அதற்கு இழப்பீடாக மிகவும் அதிக மதிப்பிலான இடத்தில் 50:50 என்ற விகிதம் அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டதது. இந்த விவகார்தில் 4 ஆயிரம் கோடி முதல் 5 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் உங்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது? இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சித்தராமையாகவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுந்திருந்தார். இது தொடர்பாக அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.

    அப்போது ஆளுநர் தனது கடிதத்தை திரும்பப்பெற வேண்டும் என அதில் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்துதான் ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளார்.

    Next Story
    ×