search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Siddaramaiah MUDA
    X

    முடா முறைகேடு: சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக ஆளுநர் ஒப்புதல்

    • முடா முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் கர்நாடகாவில் விசுவரூபம் எடுத்துள்ளது.
    • கர்நாடக கவர்னர் பாஜகவின் கைப்பாவை என முதல்வர் சித்தராமையா விமர்சனம்.

    கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்களான டி.ஜே. ஆப்ரஹாம், பிரதீப், கிருஷ்ணா ஆகிய 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது? இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக கர்நாடக மாநில கேபினட் ஆலோசனை நடத்தியது. கவர்னர் நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இதனையடுத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் மத்திய அரசு மற்றும் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கைப்பாவை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்தார். கவர்னர் நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், முடா முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

    Next Story
    ×