search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி
    X

    அதானியை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி

    • கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
    • 2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அம்பானி, இந்தியாவின் கோடீஸ்வரர் அட்டவணையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    மும்பை:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறை முக்கிய பங்காற்றி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி காரணமாக நாட்டின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இதே நேரத்தில் நாட்டில் உள்ள பணக்காரர்கள் பட்டியலிலும் புதிதாக பலர் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 2022-ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த கவுதம் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மீண்டும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் தக்க வைத்துள்ளார்.

    இதன் காரணமாக இந்திய பணக்காரர்களின் தரவரிசை 2023-ல் 152 ஆக உயர்ந்துள்ளது அவர்களின் மொத்த நிகர பண மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் முன்னோடியில்லாத வகையில் 858.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து (126) பில்லியனர் ஊக்குவிப்பாளர்களின் எண்ணிக்கையில் 21 சதவிகிதம் அதிகரிப்பையும், முந்தைய ஆண்டை விட (சுமார் 739 பில்லியன் டாலர்) அவர்களின் மொத்த நிகர மதிப்பில் 16 சதவிகித உயர்வையும் குறிக்கிறது.

    இந்த கோடீஸ்வரர்களின் நிறுவனங்களில் தங்கள் குடும்பத்தின் பங்குகளின் சந்தை மதிப்பின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால், 2023-ல் 16.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர மதிப்பில் 15.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பெற்றுள்ளது 2023-ம் ஆண்டின் பில்லியனர் கிளப்பின் ஜனநாயக மயமாக்கலை வெளிப்படுத்துகிறது. புதிய உறுப்பினர்கள் இடம் பிடித்ததின் காரணமாக ஒட்டுமொத்த நிகர மதிப்பில் முதல் 3 இடங்களை பிடித்த கோடீஸ்வர நிறுவனங்களின் பங்கு குறைந்து வருகிறது.

    நாட்டின் 2 முதன்மையான பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோர் மற்ற அனைத்து கோடீஸ்வரர்களின் மொத்த நிகர மதிப்பில் 25.5 சதவிகிதம் ஆகும்.

    2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அம்பானி, இந்தியாவின் கோடீஸ்வரர் அட்டவணையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் அதானி, 2022-ல் முதல்முறையாக பட்டியலில் முதலிடத்தை பிடித்த நிலையில் அம்பானியின் நிகர மதிப்பு 4.7 சதவீதம் உயர்ந்து 112.4 பில்லியன் டாலரை எட்டியிருந்தது.

    இந்த நிலையில் 2023-ம் ஆண்டில் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுபோல கடந்த 2022-ல் நாடார் அவென்யூ சூப்பர்மார்ட்சின் ராதாகிஷன் தமானியை விஞ்சி இந்தியாவின் 3-வது பணக்கார தொழிலதிபர் ஆனார், நிகர மதிப்பு 29.3 பில்லியன் டாலர். இது 2022 இறுதியில் (21.75 பில்லியன்) 34.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ராதாகிஷன் தமானி 2023-ல் பிசினஸ் ஸ்டாண்டர்ட் கோடீஸ்வரர் பட்டியலில் 4-வது இடத்திற்கு சரிந்தார். அவரை தொடர்ந்து விப்ரோவின் அசிம் பிரேம்ஜி இப்போது இந்தியாவின் 5-வது பணக்காரராக உள்ளார். அவரது நிகர மதிப்பு 21.8 பில்லியன் டாலராக உள்ளது.

    மேலும் இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் முதல் 10 பேர் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் ஏசியன் பெயிண்ட்சின் மாலவ் டானி, அம்ரிதா வக்கீல் மற்றும் மனிஷ் சோக்ஸி (ஒருங்கிணைந்த நிகரம்) மதிப்பு 20.8 பில்லியன் டாலர்), சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் எஸ்.ஷங்வி (20.7 பில்லியன் டாலர்), பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் ((20.2 பில்லியன் டாலர்), ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் (18.9 பில்லியன் டாலர்) மற்றும் ராஜீவ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ், ராகுல் பஜாஜ் குழுமத்தின் (16.7 பில்லியன் டாலர்).

    2023-ல் ஐ.பி.ஓ. ஏற்றம் காரணமாக புதிய கோடீஸ்வரர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேன்கைண்ட் பார்மாவைச் சேர்ந்த ரமேஷ் சந்த் ஜுனேஜா இந்தியாவின் 25-வது பணக்கார தொழி லதிபர் ஆனார். கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பிடித்தவர்கள் செலோ வேர்ல்டின் பிரதீப் ஜி ரத்தோட் (1.6 பில்லியன் டாலர்), ஆர்.ஆர்.கேபலின் திரிபுவன்பிரசாத் கப்ரா (1.3 பில்லியன் டாலர்), மற்றும் சிக்னேச்சர் குளோபலின் பிரதீப் குமார் அகர்வால் (1 பில்லியன் டாலர்) ஆகியோரும் அடங்குவர்.

    கடந்த 2023-ம் ஆண்டு தனியார் துறையில் பல்வேறு வளர்ச்சிகள் எட்டப்பட்டுள்ள நிலையில் பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பிடித்துள்ளது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×