என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தள்ளு தள்ளு.. பிரேக்-டவுன் ஆகி நின்ற பேருந்து.. களத்தில் இறங்கிய மக்கள் - வைரலாகும் வீடியோ!
- மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து பிரேக்-டவுன் ஆகி நின்றுவிட்டது.
- சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சமூக வலைதளங்களில் காவல் துறை சார்பில் வெளியிடப்படும் பதிவுகள் மக்களுக்கு உதவியாகவும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், முக்கிய தகவல்களை வழங்குபவையாகவும் இருந்து வருகின்றன. சமயங்களில் காவல் துறை சார்பில் பகிரப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், மும்பை போலீஸ் சார்பில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ பேசுபொருளாகி இருக்கிறது.
மும்பை போலீஸ் சார்பில் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், மாநகர பேருந்தை பொது மக்கள் ஒன்றிணைந்து தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த போது மும்பை மாநகர பேருந்து பிரேக்-டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டது. பின் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்தை தள்ளினர். இந்த சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவினை பயனர் ஒருவர் தனது டுவிட்டர் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை ரிடுவிட் செய்த மும்பை போலீஸ், "மும்பை கண நேர சம்பவங்கள் - Ctrl+S! மும்பையின் பலம் ஒவ்வொரு மும்பைவாசியின் கைகளில் உள்ளது. காக்கியில் உள்ள எங்களது நண்பர் இதனை பார்த்துள்ளார்," என்று பதிவிட்டுள்ளார்.