என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு
- குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
- புஜ் மாவட்டத்தில் உள்ள லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
இந்தநிலையில் புஜ் மாவட்டத்தில் பலர் திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.
கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மொத்தம் 11 பேர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் குழந்தைகள்.
இந்தநிலையில் குஜராத் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் பட்டேல், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதில் புஜ் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புஜ் மாவட்டத்தில் உள்ள லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலுக்கு 11 பேர் இறந்தனர். அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தாமதமாக ஆஸ்பத்திரிக்கு வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதானி ஜி.கே. அரசு ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் மற்றும் 30 செயற்கை சுவாசக் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் டாக்டர்கள் தலைமையிலான 50 மருத்துவக் குழுக்களுடன், இருதய நோய் நிபுணர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு டாக்டர்களையும் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் காந்திநகரில் உள்ள குஜராத் நுண்ணுயிரியல் ஆய்வு மையத்துக்கும், புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு வந்த பிறகு இது எந்த விதமான காய்ச்சல் என்று தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்