search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Supreme Court
    X

    நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் உத்தரவால் 4 மதிப்பெண்களை இழக்கும் 4.2 லட்சம் பேர்

    • அணு தொடர்பான 29-வது கேள்விக்கு இரண்டு பதிலுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது.
    • தவறான பதிலுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதால் தனது தரவரிசை பாதிக்கப்படுவதாக ஒருவர் மனு.

    நீட் தேர்வு மற்றும் முடிவு தொடர்பான முறைகேடு தொடர்பாக தேர்வு எழுதிய பலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவர் அணு தொடர்பான 29-வது கேள்விக்கு ஆப்சன் 4 மற்றும் ஆப்சன் 2 ஆகிய இரண்டையும் தேர்வு செய்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் காரணமாக தான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

    என்சிஇஆர்டி-யின் (NCERT) புதிய புத்தகத்தை பின்பற்றவும் என தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டிருந்தது. அதன்படி ஆப்சன் 4 சரியான விடை. பழைய புத்தகத்தின்படி ஆப்சன் 2 சரியான விடையாகும். ஆனால் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆப்சன் 2 என பதில் அளித்தவர்களுக்கு 4.2 லட்சம் பேர் கருணை மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் 44 பேர் முழு மதிப்பெண் பெற்றவர்கள் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மனு தாக்கல் செய்திருந்தவர் 711 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    உச்சநீதிமன்றம் ஒரு கேள்விக்கு இரண்டு பதில் சரியாகாது. சரியான பதில் எது என்பதை தெரிவிக்க டெல்லி ஐஐடி இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது. 3 பேர் கொண்ட குழு உச்சநீதிமன்றம் ஆப்சன் 4-தான் சரியான பதில் என அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றம் ஆப்சன் 4-தான் 29-வது கேள்விக்கு சரியான பதில் என உத்தரவிட்டுள்ளது.

    இதனால் ஆப்சன் 2-ஐ தேர்வு செய்த 4 மதிப்பெண் பெற்ற 4.2 லட்சம் பேர் அந்த மதிப்பெண்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

    Next Story
    ×