என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பணிவிடை செய்தவர் பிரதமரா?: கைலாசாவில் ரஞ்சிதா மீது சீடர்கள் கடும் அதிருப்தி
- உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கைலாசா கிளைகளின் நிர்வாகத்திலும் ரஞ்சிதா தீவிரம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின.
- சீடர்கள் மத்தியிலேயே இரு பிரிவாக செயல்படுவது நித்யானந்தாவுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் வழக்குகளில் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், அந்த நாட்டிற்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் மற்றும் கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என தனித்தனி பெண் சீடர்களையும் அறிவித்து பரபரப்பை எகிற வைத்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா சார்பில் பங்கேற்ற பெண் சீடர்கள் இந்தியா குறித்து பேசியது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களது பேச்சு குறிப்பில் எடுத்துக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்காவில் சிஸ்டர் சிட்டி என்ற பெயரில் மெகா மோசடியில் ஈடுபட்டதாகவும் நித்யானந்தா மீது புகார்கள் எழுந்தது.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தா அறிவித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியானது.
அதன்பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கைலாசா கிளைகளின் நிர்வாகத்திலும் ரஞ்சிதா தீவிரம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நித்யானந்தாவை போல ரஞ்சிதாவும் பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இதனால் கைலாசவில் நித்யானந்தாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்க ரஞ்சிதா திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சமீபகாலமாக ரஞ்சிதாவின் நடவடிக்கைகள் கைலாசாவில் உள்ள சீடர்கள் சிலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்வதற்காக வந்தவர். மருந்து மாத்திரை எடுத்து கொடுத்தவர் எல்லாம் கைலாசாவில் தலைமை பொறுப்பிற்கு எப்படி வரலாம்... அவர் எங்களை போன்று கஷ்டப்பட்டாரா? அவர் பிரதமரா? என ஆதங்கப்பட்டு பேசி உள்ளனர்.
இதனால் ரஞ்சிதாவின் சொற்பொழிவு வீடியோக்களை சமூக வலைதளங்கள் பக்கங்களில் பதிவிடுவதையும், நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
தனக்கு எதிராக இதுபோன்று சில சீடர்கள் அதிருப்தியில் இருப்பதை அறிந்த ரஞ்சிதா தனக்கு என ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
சீடர்கள் மத்தியிலேயே இரு பிரிவாக செயல்படுவது நித்யானந்தாவுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்