என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடகாவில் அடுத்த முதல்வரை கட்சி மேலிடம் முடிவு செய்யும் - மல்லிகார்ஜூன கார்கே அதிரடி!
- முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கருத்தை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க குழு உருவாக்கம்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அம்மாநிலத்தில் முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது.
இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் கருத்தை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கையாக சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். தற்போது வரை எல்லாமே சரியாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆட்சியமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதை கடந்து மாநில மக்களுக்கு சேவையாற்றுவதே எங்களின் குறிக்கோள். கர்நாடக மக்கள் பாஜக-வை நிராகரித்துள்ளனர். மக்கள் பணவீக்கம், வேலையின்மை மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.