search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரிப்பு- பிரதமர் மோடி
    X

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரிப்பு- பிரதமர் மோடி

    • மனிதநேயம் கடந்த காலங்களில் பல சவால்களை சந்தித்துள்ளது.
    • தூய்மையான பூமியை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    புதுடெல்லி:

    பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    செப்டம்பர் 2023-ல், ஜி 20 உச்சிமாநாடு இந்தியாவில் நடந்தது. இதில் பசுமை ஹைட்ரஜனுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

    5 உயர்நிலை தன்னார்வக் கொள்கைகளை பிரகடனம் செய்து ஜி 20 தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த கோட்பாடுகள் ஒரு ஒருங்கிணைந்த பாதையை உருவாக்க உதவுகின்றன. நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும். விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பசுமை ஹைட்ரஜன் துறைக்கு உதவ பொதுக்கொள்கையில் மாற்றங்களை பரிந்துரைக்கலாம், கடல் நீரையும் நகராட்சி கழிவு நீரையும் உற்பத்திக்கு பயன்படுத்துவதை நாம் ஆராயலாமா? பொது போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்நாட்டு நீர்வழிகளில் பசுமை ஹைட்ரஜனை எவ்வாறு பயன்படுத்த முடியும்.

    இதுபோன்ற தலைப்புகளை ஒன்றாக ஆராய்வது, உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இது போன்ற பல கருத்துகளை பரிமாறிக்கொள்ள இந்த மாநாடு உதவும். மனிதநேயம் கடந்த காலங்களில் பல சவால்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் கூட்டான மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் துன்பங்களை வென்று மீண்டு வந்துள்ளோம்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் 3 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட புகை படிவமற்ற எரிபொருள் திறன் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சாதனைகளால் ஓய்வு எடுக்கவில்லை தீர்வுகளை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. தூய்மையான பூமியை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    பின்னர் மோடி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இந்தியா எக்ஸ்போ கண்காட்சியை பார்வையிட்டார். அதை தொடர்ந்து செமிகான் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×