என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ரொம்ப சந்தோஷம் பா.... ஈஸ்வரப்பாவுக்கு போனில் சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி!
- கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கேஎஸ் ஈஸ்வரப்பா விருப்பம் தெரிவித்து இருந்தார்.
- ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மந்திரி கேஎஸ் ஈஸ்வரப்பா தொகுதியில் மாற்று வேட்பாளர் போட்டியிடுகிறார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று இருக்கிறது. போட்டியிடுவோர் இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான கேஎஸ் ஈஸ்வரப்பா போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். எனினும், இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மாற்று வேட்பாளர் இவரது தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்து இருந்தது. பாஜக-வின் இந்த முடிவை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா ஏமாற்றம் அடைந்து இருந்த போதிலும், கட்சியின் முடிவை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கேஎஸ் ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும், கட்சி முடிவை ஏற்றுக் கொண்டதற்காக ஈஸ்வரப்பாவை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் கட்சி மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்தை பாராட்டினார்.
"கட்சி மீது நீங்கள் வைத்திருக்கும் பொறுப்பை வெளிப்படுத்திவீட்டீர்கள். உங்களை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனால் தான் உங்களிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன்," என்று பிரதமர் மோடி கேஎஸ் ஈஸ்வரப்பாவிடம் தெரிவித்தார். அடுத்த முறை கர்நாடகா வரும் போது நிச்சயம் உங்களை சந்திக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
"உங்களை போன்றே தலைவர் என்னை போன்ற சாதாரண பணியாளருக்கு அழைப்பு மேற்கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான அனைத்து பணிகளையும் கட்டாயம் மேற்கொள்வேன்," என்று முன்னாள் மந்திரி கேஎஸ் ஈஸ்வரப்பா பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.