என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
புதிய அரசிற்கான முதல் 100 நாள் திட்டத்தை தயார் செய்யுங்கள்: அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு
- பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மோடி, ஜூன் மாதம் பொறுப்பேற்க போகும் புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்கள் மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய அரசு அமைந்தவுடன், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட செயலர்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாய் ஈடுபட்டாலும், அரசுப் பணிகளை வழக்கம் போல் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.