என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் திகழ்கிறது.
- இந்திய கலாச்சாரத்திற்கு மைசூரு தசரா விழா பெருமை சேர்க்கிறது.
ஹூப்ளி:
கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். தெய்வீக திருவிழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது என்று அவர் கூறினார். மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழா என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர், ஹூப்ளியில் நடைபெற்ற பூர சன்மனா பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவருக்கு 900 கிராம் எடை கொண்ட ஸ்ரீசித்தரோட சாமி சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பரிசளித்தார்.
விழாவில் பேசிய திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:- நீங்கள் பாராட்டியது இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியுள்ளீர்கள். இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடையக்கூடிய நேரம் இது. அனைவரும் இதற்கு இணைந்து செயல்படவேண்டும். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
கணினி ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்ததுள்ளது. இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.